ஒரு லட்சம் கார்களைத் திரும்பப் பெறும் மாருதி சுஸுகி... ஏன் தெரியுமா

பேட்டரிகள் தீப்பிடிப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, ஒரு லட்சம் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் திரும்பப் பெறவுள்ளது.


இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. 53 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ள இந்நிறுவனம் சியாஸ்எர்டிகா, வேகன் ஆர், ஆல்டோ கே-10, ஆல்டோ 800, ஸ்விஃப்ட், செலெரியோ, ஸ்விஃப்ட் டிசையர், பலேனோ, பலேனோ ஆர்.எஸ்., ஆம்னி, ஈக்கோ, இக்னிஸ், எஸ்-கிராஸ், விட்டெரா பிரெஸ்ஸா, எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.