அப்போது கஞ்சா, மது அருந்தி விட்டு மூன்று இளைஞர்கள் வந்துள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் அப்பெண்ணிடம் மூவரில் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். மற்ற இரு இளைஞர்களும் பெண்ணை சுற்றி நின்று கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் பதற்றமடைந்த பெண் கூச்சலிட்டார். இதைக் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அவர்கள் மூன்று இளைஞர்களையும் பிடித்து அடித்து உதைத்தனர். மூவரையும் பீர்க்கன்கரணை போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார், குற்றவாளிகள் படப்பையை சேர்ந்த அலெக்ஸ்(19), செந்தில் குமார்(19), பாலாஜி(19) என்று கண்டறிந்தனர்.
அவர்கள் போதையில் இருந்ததையும் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதையும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.