மாருதி கார்களின் லித்தியம் அயன் பேட்டரிகளில்

தீப்பற்றுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அக்கோளாறுகளை சரிசெய்து தரும் பணியில் மாருதி சுஸுகி இறங்கியுள்ளது. அதன்படி, சியாஸ், எர்டிகா, எக்ஸ்.எல்.6 ஆகிய ஸ்மார்ட் ஹைபிர்ட் கார்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கார்கள் திரும்பப் பெறப்படவுள்ளன'


. சீட்களுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும் இந்த லித்தியம் அயன் பேட்டரிகள் சமீபத்தில் சில இடங்களில் தீப்பிடித்து எழுந்ததாகப் புகார்கள் வந்துள்ளன.


கடந்த ஒரு ஆண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட புதிய எர்டிகா, சியாஸ், எக்ஸ்.எல்.6 கார்களின் லித்தியம் அயன் பேட்டரிகளில் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கூறிய பிரிவுகளின் கீழ் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் இந்திய சாலைகளில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதில் ஒரு லட்சம் கார்கள் வரையில் திரும்பப்பெறப்படவுள்ளன.