மீபத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் செரியலூர்இனாம் கிராம பஞ்சாயத்து தலைவரா

ந்த நிலையில், சமீபத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் செரியலூர்இனாம் கிராம பஞ்சாயத்து தலைவராக முகமது ஜியாவுதீன் (45) என்பவரை அக்கிராம மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர். மொத்தம் 1,360 வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், முகமது ஜியாவுதீன் 554 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 5 வாக்காளர்களில் சங்கர் என்பவர் மட்டும் ஜியாவுதீனை விட 17 வாக்குகள் குறைவாக பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

மாநிலம் முழுவதும் பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்பட்ட குற்றச்சாட்டுக்கு செரியலூர்இனாம் கிராமமும் உள்ளானதாக கூறும் அந்த கிராம வாசி ராஜகோபால், பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.10 லட்சம் வரை ஏலம் போனது. ஆனால், உள்ளூர் மக்களுக்கு நலன் பயக்காத ஏலம் விடும் முறைக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை என்றார்.