தமிழக அரசில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
திருவண்ணாமலை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், தேனி, தூத்துக்குடி, கடலூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, இத்தகைய மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பப்படுகிறது.